தலைநகரில் தலைவர் தலைமையில் கல்வித்தந்தை நினைவு நாள்
கல்வி தந்தை
மூக்கையா தேவர் அவர்களின்
ினைவு நாள் முன்னிட்டு ஐயா
P. K. மூக்கையா தேவர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில்
திரு. கோகுல கிருஷ்ணன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர், திரு. மணிகண்டன், தகவல் தொழிற்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்,
திரு. கார்த்திக் வெங்கடேஷ், இளைஞர் அணி துணை செயலாளர்,
திருமதி. தீபா சிவாஜி, சென்னை மண்டல மகளிர் அணி செயலாளர்,
திரு . ராஜதுரை, மருத்துவர் அணி தலைவர், தென்சென்னை இளைஞர் அணி செயலாளர் திரு. சதிஷ் ,
திரு.V.P.கிஷோர் தேவர், வட சென்னை மாவட்ட செயலாளர்,
திரு. கணபதி, தென்சென்னை மாவட்ட செயலாளர், திரு.வை ரஞ்சித் குமார் , திருவள்ளூர் மாவட்ட செயலாளர், திரு. இசக்கி பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர், சி. முத்து பாண்டியன்
சைதை பகுதி தலைவர், திரு.m. k. அய்யனார் பாண்டியன், சைதை பகுதி செயலாளர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தலைநகரில் தலைவர் தலைமையில் பூலித்தேவர் ஜெயந்தி விழா
சென்னை தலைநகரில் தலைவர் இல்லத்தில் மு
தல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இவ்விழாவில்
DEFENDER திரு. கோகுல கிருஷ்ணன் (மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ), திரு.அஜய் வாண்டையார் (மாநில இளைஞரணி செயலாளர் ), திரு. மணிகண்டன் (மாநில ஒருங்கிணைப்பாளர், IT பிரிவு ), திரு. வெங்கடேஷ் (இளைஞர் அணி துணை தலைவர் ), திரு. சதிஷ், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர், திரு. இசக்கி பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர், திரு. அய்யனார் பாண்டியன், சைதை பகுதி செயலாளர் மற்றும் சென்னை மண்டல நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
வானமே சாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடி பணிவனோ?
உயிரே போயினும்
ரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்!
என முழங்கிய வீரத்தமிழர் பூலித்தேவருக்கு இன்று விழா. இந்த இனத்திற்கு வீரத்தை விதைத்து இம்மண்ணின் மானத்தை காத்த புலி! பூலித்தேவன்!
பூலித்தேவன் (1715 -1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ, அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ,வரி என்ற பெயரிலோ,ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றானது என்பதுதான் வரலாறு.
1750-இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என ‘பூலித்தேவன் சிந்து’ என்ற கதைப்பாடல் கூறுகிறது.
1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்ற தமிழன் பூலித்தேவன்!
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் மறுத்த மானத்த தமிழன் பூலித்தேவன்!
பூலித்தேவன் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடியபோது. அச்சமயம் சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பி அதன்படி கும்பினியப் போர்வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் வரலாற்றுப்பதிவுகள் எடுத்துரைக்கின்றன. பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்”ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.
11 வயதில் அரசர் பட்டம் சூட்டி மகிழ்ந்தார் இவரது தந்தை. 12 வயதில் அரசரான காத்தப்ப புலித்தேவன், மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளுக்குச் சென்று வேட்டையாடுதலை தனது பொழுது போக்காகவும், புலியை வேட்டையாடுவதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டி ருந்தார். புலியை வேட்டையாடி, அதன் தோலில் உடை செய்து அணிந்து கொள்வார். இவரின் வீரத்தினையும், இவரது குலத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. எது என்ன தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்குக் கோபுர பகுதியின் உள்ளே புலி ஒன்று புகுந்து, அங்கு இருந்த மக்களை கொன்றும், ஆடு, மாடுகளை வேட்டையாடியும், மக்கள் வீட்டை விட்டு வெளிவரவும், கிராமத்தை விட்டு வெளிவர அச்சம் கொள்ளும் அளவிலும் புலியின் செயல்பாடுகள் இருந்தது. இதனை அறிந்த அரசர் அந்த புலியைக் கொள்ளும் வீரருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று முரசு அடித்து பறைசாற்றினார். இந்த செய்தியை கேள்வியுற்ற புலித்தேவர், புலியை வேட்டையாடுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அல்லவா, உடனே புறப்பட்டார். புலி இருந்த கிராமத்தினை அடைந்தார்.
புலியை எதிர் கொள்ளும் போது, புலி இவரைக் கண்டு தனது உறுமலையும், வாலை தரையில் அடித்தும் புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானது. புலி இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது இறக்கும் என்பதை அறிந்த புலித்தேவர் புலியை எதிர்கொண்டு நின்றார். பாய்ந்து வந்த புலியிடம் சற்று விலகி புலியின் பின்னங்கால்கள் இரண்டையும் கையால் பிடித்து இழுத்து, புலியை கிறுகிறுவென்று சுழற்றி புலியை தூக்கி தரையில் அடித்துக் கொன்றார். அரசர் உடனே புலித்தேவருக்கு பட்டம், பொன், மாளிகை என அனைத்தும் கொடுத்து சிறப்பித்தார். வெற்றியுடன் தனது பாளையத்துக்குத் திரும்பினார்.
மண் விடுதலைக்காகப் போராடிய தமிழரின் தலைமை அடையாளம் பூலித்தேவன்!
பிரெஞ்சு நாட்டுத் தளபதி டியூப்ளே. அவன் மிகப்பெரிய தளபதி இராபர்ட் கிளைவ்வோடு போரிட்டவன். சந்தர்ப்பவசத்தால் தோற்றுப்போனவன். பாண்டிச்சேரியைக் கைப்பற்றிய வன். அந்தப் பாண்டிச்சேரியை பிரெஞ்சின் காலனியாக்கிய டியூப்ளேயின் மொழிபெயர்ப் பாளர்தான் துபாஸ் ஆனந்தரங்கம்பிள்ளை. அவர் நாட்குறிப்பு எழுதியிருக்கிறார்.
சரித்திரப் புகழ்பெற்ற அந்த டைரியில் பூலித்தேவனை பதிவு செய்து இருக்கிறான்! அன்றைய எதிரியாக வெள்ளையர்கள் கூட தமிழன் வீரத்தை பதிவு செய்து வைத்திருப்பது தான் நமது வீரவரலாறு!
அந்த வெள்ளையர் 1736 செப்டம்பர் 6 இல் தொடங்க 1761 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரை டைரி எழுதி இருக்கிறார். அந்த டைரி ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. அந்த டைரியில் அவர் 11 பாகங்கள். 11 ஆவது பாகத்தில் மன்னர் பூலித்தேவரைப்பற்றி எழுதுகிறார். அப்பொழுது சொல்கிறார். இவரது பண்பாட்டை மாபூஸ்கான் என்பவன் மன்னர் அரண்மனையில் இருந்து அவன் விடைபெற்றுப் போகிறபோது அவனது பட்டுச் சட்டையும், பொன்னாபரணங்களையும் அவனுடைய கைவசம் இருந்த பொன்னையும், பொருளையும் பாதுகாப்பாக வைத்துவிட்டுப்போனான்.
இதை இங்கேயிருந்து அனுப்பிவைக்கிறார் பூலித்தேவன். அவர் இதை எழுதுகிறார். ஒரு தேதியைக் குறிப்பிட்டு 1757 ஆம் ஆண்டில் டிசம்பர் 21 தேதியைக் குறிப்பிட்டு பூலித்தேவன் அரண்மனையில் இருந்து பொன்னும் பொருளும் பட்டாடைகளும் திருவண்ணாமலை கம்மந்தானிடம் ஒப்படைக்கப்பட்டது என்று செய்தி கிடைத்திருக்கிறது என்று டைரியில் எழுதுகிறார். விலைமதிப்பற்ற பொருள்கள் அனைத்தையும் பத்திரமாக அனுப்பி வைத்தார் பூலித்தேவர் என்பது அவரது நேர்மை நாணயத்துக்கு வரலாற்றுச் சான்றாகும்.
அதுமட்டுமா! வெள்ளைக்காரன் எழுதுகிறான். 18 அடி நீளமுள்ள ஈட்டியை வாசுதேவ நல்லூர் மறவர்கள் பயன்படுத்தினார்கள். நெற்கட்டுஞ்செவல் மறவர்கள் பயன்படுத்தி னார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 18 அடி நீளமுள்ள ஈட்டியை எப்படி அவர்கள் பயன்படுத்தினார்கள் என்று எனக்கே வியப்பாக உள்ளது. இங்கே இருக்கின்ற மக்கள் ஒவ்வொருவரும் எந்த நேரத்திலும் கையில் வாளும், வளைதடியும், கேடயமும் பக்கத்தில் வைத்திருப்பார்கள் என்று எழுதுகிறான் வெள்ளைக்காரன்.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் மறைந்ததைப்போல, நேதாஜி நேதாஜிசந்திரபோஸ் மரணத்தைப்போல, சங்கரன்கோவில் கோவிலுக்குள் நுழையும் பூலித்தேவரின் மறைவும் மர்மம் நிறைந்ததாகவும், ஒளியில் கரைந்தாகவும் வரலாறு எடுத்துரைக்கிறது!
இந்த மண் வீரம் நிறைந்த மண். மானம் நிறைந்த மண் நம் தமிழ்மண். இன்று சாதி மதத்தால் நம்மை துண்டு துண்டுப்பிரித்து வைத்து நம்மை சூறையாடிக் கொண்டிருக்கிறது அந்நிய ஏகாதிபத்திய சக்தி! ஆனால் பூலித்தேவன் சமூக ஒற்றுமையை நிலைநாட்டிய தலைவன்! மதநல்லிணக்கத்தை பாதுகாத்த தமிழன்!
வாசுதேவநல்லூரில் அல்லா தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. காரணம் என்னவென்று தெரியுமா? மாபூஸ்கான் இருந்தபோது இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு என்று பள்ளி வாசலை அமைத்துத்தந்தவர் பூலித்தேவர். வாசுதேவநல்லூரிலும் சரி, நெற்கட்டுஞ் செவலிலும் சரி. அனைத்து மதத்தினரும் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் பூலித்தேவன். அவரது படையில் பக்கத்தில் பீர்முகமது சாயுபு இருந்தார்.அனைத்து சாதியி னரும் தலைமைப்பொறுப்பில் இருந்தனர் என்பதே வரலாறு! இந்த புரிதல் இன்றைய தலைமுறையினருக்கு வரவேண்டும்! மதநல்லிணக்கமும், சகோதரத்து வமும் இருந்த அந்தப் பண்பாட்டை நிலைநாட்டிய பூலித்தேவன்! மண் விடுதலைக்காக மட்டுமின்றி மனித விடுதலைக்காகவும் வாழ்ந்தவர் என்பதை உணரவேண்டும்!
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
சேது. கரு
ாஸ் எம்.எல்.ஏ., இரங்கல் அறிக்கை
கொரோனாவிலிருந்து குணமடைந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் நான், அன்பிற்கினிய பெருந்தகை வசந்தகுமார் கொரோனா தொற்றால் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்கு பேரிடியாக இருந்தது. உழைப்பின் உருவமாய் நம்பிக்கையின் அடையாளமாய் திகழ்ந்தவர் சகோதரர் வசந்தகுமார் அவர்கள்!
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகவும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மக்களுக்கு தொண்டாற்றியவர். அனைவருடனும் கட்சிபேதம் பார்க்காமல் அன்பு செலுத்தும் பண்பாளர்.
மரியாதைக்குரிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் இளைய சகோதரர் வசந்தகுமார். தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து கட்சியை வழிநடத்தி தூணாக செயல்பாட்டவர். வசந்த் அன்கோ என்ற வணிகக் குழுமத்தை உருவாக்கி அதை உலகெங்கும் கிளைவிரித்து மக்களுடைய நன்மதிப்பைப் பெற்ற தொழிலதிபர் அண்ணன் வசந்தகுமார் அவர்கள், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு தமது தொகுதி மேம்பாட்டிற்கு பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பிறகு சென்னை விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்து, அதன்பிறகு சிறிய முதலீட்டில் கொண்டு மளிகைக் கடையைத் தொடங்கி, பிறகு தவணைப்பொருட்கள் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி உழைத்து உழைத்து முன்னேறி வசந்த் அண் கோ என்னும் வணிக நிறுவனத்தை வீதியெல்லாம் விதைத்து உழைப்பின் அடையாளமாகவும், நம்பிக்கையின் சிகரமா கவும் விளங்கியவர் அண்ணன் வசந்தகுமார் அவர்கள்.
காங்கிரசு கட்சியில் நெஞ்சுரம் மிக்க தூய்மையான மனிதராக திகழ்ந்தவர். நல்ல பேச்சாளர், அதுமட்டுமின்றி மிகுந்த தமிழ்ப்பற்றுக் கொண்டவர். அவரோடு ஒரு சந்தித்து உரையாடினால் அருகில் இருப்போரை கலகலப்பாக்கக் கூடியவர். தன்னம் பிக்கையை வளர்க்கும் விதமாகவே உரையாடுவார்.
ஒவ்வொரு வீடுகளிலும் அவர் புகைப்பட முத்திரைப்பதித்து அவரின் பெயரோடு இருக்கும் ஒவ்வொரு பொருள்கள் அனைத்திலும் அவர் முகம் தெரியும். அன்றாட தொலைக்காட்சி விளம்பரங்களில் சுற்றும் நாற்காலியில் சுழன்று வணக்கம் செலுத்து வசந்தகுமார் இன்று நம்மைவிட்டு பிரிந்து விட்டார் என்று நினைக்கும் போது இதயம் படபடக்கிறது.
உழைப்பால் உயர்ந்த ஒரு உற்சாக மனிதரை, தன்னம்பிக்கையை விதைத்த ஒரு எளிய மனிதரை கொரோனா எனும் கொடுந்தொற்று கொன்றுவிட்டது. நாமும் நமக்கான அனைவரும் நமக்கான தற்காப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். எப்படி வருமென்றே தெரியாத கொரோனா நம்மை நெருங்கவிடாமல் உடல்நிலை பேணவேண்டும் என்பதே சகோதரர் வசந்தகுமாரின் மரணம் நமக்கு வழங்கியிருக்கிற படிப்பினை!
காங்கிரசு பேரியக்கத்தின் தமிழக தலைவரான கன்னியமுள்ள அரசியல் தலைவராக வலம் வந்த சகோதரர் வசந்தகுமார் அவர்களை இழந்துவாடும் காங்கிரசு கட்சியின் தொண்டர்களுக்கும், அவரது தொகுதிவாழ் மக்களுக்கும், வசந்தகுமார் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
இவ்வாறு தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்தார்
தொடர்ச்சியாக முக்குலத்தோர்
மீது ஒருதலைபட்சமாக செயல்படும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்க
ணிப்பாளர் திரு. வருண்குமார் IPS அவர்கள் மீது சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை காவல்துறை அலுவலத்தில், காவல் துறை இயக்குனர்(DGP) மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) ஆகிய இருவரிடமும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நிறுவனத் தலைவர் வீரத்தமிழர் சேது. கருணாஸ்,எம்.எல்.ஏ., அவர்களும் மற்றும் பொதுச் செயலாளர் தமோதரக்கிருஷ்ணன் அவர்களும் புகார் மனுவை அளித்தனர்
முக்குலத்தோர் புலிப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று பிற்பகல் முக்குலத்தோர் புலிப்பட
ை நிறுவுனத் தலைவர் வீரத்தமிழர் சேது.கருணாஸ் அவர்கள் இனிதே துவக்கி வைத்தார்.இத்தளம் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் அதிகாரப்பூர்வமான தளம்! இதில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் கட்சி தலைமையின் நேரடி மேற்பார்வைக்கு உட்பட்டே வெளியிடப்படுகிறது. பார்வையாளர்கள் இத்தளத்தில் வெளிவரும் செய்திகளை முழுமையாக நம்பலாம்! இத்தளம் மட்டுமே கட்சியின் அதிகாரப் பூர்வமான தளம் என தெரிவித்தார்